Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p293

Kumārasvāmīya p293

Language
Tamil

p293

அவ்வாறு நிகழ்கையில் முருகவேளினது இரதமும் முன்னேறிச் சென்றது. வலிமிக்க அச்சேனை தன்னியக்கத்திற் குறைவற்ற கடலுக் கொப்பாயிருந்தது. பேரிகை யாதி வாத்தியங்களினோசை அக்கடலினோசையை நிகர்த்தது. அருணகிரி நாதனார் நெறிச்சென்று இன்பங்காணு நல்லீர்! மேலுஞ் சொல்ல வேண்டியவற்றை இனிச் சொல்லுவேனாக. (க0)