Kumarasvamiya p130
Kumārasvāmīya p130
- Language
- Tamil
p130
பரிசுத்தமான பிறைச்சந்திரன் தங்கியுள்ள சடாமண்டல மஸ்தக சிவபெருமான் தந்தருளிய சுப்பிரமணியனாகிய சுரகுகுருவின் அழகிய திருவடித்தாமரைகளை, அந்தப் பிரம தேவன் நம்பாது கைவிட்டவாறு விடுபவர்கள், விசாலம்பொருந்திய யமபுரத்தைக் காண நேர்ந்தபோது, (இறைவனை முன்னம் வணங்கலும் வலம்வரலுஞ் செய்யாத) அவர்தஞ் சிவந்த கைகளுங் கால்களும் பல துண்டாகத் தரிக்கப்படும்பொழுது அழகிய கண்கள் அழுதலால் நீரை மிகச் சொரிதலும், சண்டாளரைப்போல முகாரவிந்தம் வாடுதலும் பெருமை கெடுதலும் ஒழியுமோ? [ஒழியா என்றபடி.] (ங)