Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p218

Kumārasvāmīya p218

Language
Tamil

p218

குகக்கடவுள் இந்தப் பெரிய படைப்புத் தொழிலைத் தானாகவே செய்ததனால் அவன் பிரமனைத் தண்டித்த காரியத்தில் யாதொரு குற்றமு மேற்படவில்லையென்று உணர்வீர்களாக. ஒதுதற்கரிய வேதம்வல்ல முனிவர், விளக்கமுடைத் திருமால் ஆகிய இவர்கள், விடையேறும் பெருமான் முன்பாக மிக்க அன்போடு சென்று தொழுது, "பிரமன் சிறைப்பட்டு மெலிந்து கொண்டிருக்கின்றான்; அவன்மீது எவ்வளவு பெரிய குற்றமிருந்தாலும் இப்பொழுது பொறுத்து அவனைச் சிறையிலிருந்து விடுத்தருளவேண் டும்" என்று பிரார்த்தித்தனர். (ங)