Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p262

Kumārasvāmīya p262

Language
Tamil

p262

பரிசுத்தமாகிய திருநீற்றை யள்ளித் தமது மேனிமுழுதும் உத்தூளனஞ் செய் தனர். குமாரக்கடவுளின் றிருநாமப்பெருமையைப் பெரிதும் பாராட்டித் துதித்தார்கள். காந்தியோடு விளங்குந் தமது திருமேனியிற் பெருமை பொருந்திய உருத்திராக்கத்தைத் திருவாபரணமாகக் கொண்டார்கள். இவ்வாறு, குற்றமுடையோராலறியப்படாத பெரு மையுடைய முருகப்பிரானது திரு ஆறெழுத்துக்களையும் உருவாகச் செபித்தார்கள். (சு)