Kumarasvamiya p263
Kumārasvāmīya p263
- Language
- Tamil
p263
இந்த விதமாக அவ்விருவருஞ் செய்த அப்பெரிய தவம், சில வருடங்களாகப் பொலிவுறுதலைக்கண்டு, தேவர்களுந் தவசிகளும் அதிசயித்தார்கள். அத்தபோவனத்தில் வாழ்கின்ற மானும், வேங்கையும், பாம்பும், கொடிய கீரியும், மற்றும் பிறவிப்பகையுள் ளனவென்று குறிக்கத்தக்க எல்லாப்பிராணிகளும், அத்தவத்தின் பெருமையால், ஒன்றற் கொன்று நட்புடையனவாயின. (எ)