Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p286

Kumārasvāmīya p286

Language
Tamil

p286

வேறு பதினோராயுதங்களை யெடுத்த சிவபெருமானது திருமுன்பு வடிவேலைத் தாங்கிய கடவுள், வீறுகொண்டுள்ள அப்பதினொன்றனையுந் தன் கரங்களிற்றாங்கினன். அவைகள் உருத்திரர்கட்குள் உருவலிமிக்க ஏகாதசருத்திரராம். பின்பு நீறணி கடவு ளாஞ் சிவபெருமான் வலிய புயமுடைய வீரபாகுதேவர் முதலிய நவவீரர்கட்கும் இல க்ஷம் வீரர்கட்கும் பொரவல்ல ஆயுதங்களைக் கைகள் நிரம்ப வழங்கினான். (ங)