Kumarasvamiya p288
Kumārasvāmīya p288
- Language
- Tamil
p288
அவ்வாசி மொழிகளைக் கேட்டவுடன் செவ்வேட் பரமனாகிய எம்பிதா, அவர் சன்னிதியினின்றும் புறம்போந்தனன். அங்கு வந்து நின்ற தேவர்களும் சம்புவை வணங்கி வெளிவந்த பின்பு, ஒள்ளிய பாற்கடலிற் பள்ளிகொள்ளும் விண்டுவானவர், "முருகக்கடவுள் ஆரோகணிக்குந் தேரிற் பூட்டியுள்ள இலக்ஷங் குதிரைகளையும் நீ செலுத்துவாயாக” என்று வலிகுன்றாத வாயுதேவன் என்பானை நியமித்தனர். (ரு)