Kumarasvamiya p290
Kumārasvāmīya p290
- Language
- Tamil
p290
அக்குதிரைகளைத் தொடர்ந்து வந்த பலர், “அக்கணைப்பினைப் பலவாயுள்ள வேத வொலியே” என்றனர். பலர், (இக்கணைப்பு நற்சகுனமாகலின்) நமக்கு மங்களமுண்டா மென்று துள்ளினார்கள். நல்லோர் யாவரும் மகிழ்ச்சி யெய்தினர். பலவீரர்கள், பலம் பொருந்திய கொடிகளை யசைத்துக் கூத்தாடினார்கள். வேறு பல பழைய வீரர்கள், காலங்கண்ட கோடரியையும் வாளையும் அசைத்துக்கொண்டு விளையாடினார்கள். (எ)