Kumarasvamiya p381
Kumārasvāmīya p381
- Language
- Tamil
p381
சிவந்தமேனியினையுடைய வீரபாகுதேவர், அங்கே தமது விசுவரூபத்தை யொடுக் கிக்கொண்டு மேலைவாயிலுள்ளே புகுந்து, சூரபதுமன் வீற்றிருக்குங் கொலுமன்றத்தினை யடைந்து, அவன் வாழ்க்கைச் சிறப்பினை யறிந்தார். ஆங்கவரெண்ணியபடி திருவே லேந்து தேவனானவன், யாவரும் வியந்து பாராட்டும்படி அவ்விடத்தில் (வீரபாகுதேவருக் காக) ஒரு சிங்காசனந் தோன்றி விளங்கியிருக்குமாறு செய்தருளினன். (ச)